.

தோல் பதனிடுதல் (Tanning of leather) அதன் வகைகள்

தோல் பதனிடுதல் (Tanning of leather)

விலங்குகளின் தோலை (Hide and skin) லெதராக (Leather) மாற்றும் செயல்முறையே தோல் பதனிடுதல் எனப்படும். தோல் பதனிடுதல் செய்முறையை நிகழ்த்தும் இடம் Tannery எனப்படும்.

தோல் பதனிடும் செயலில் தோலின் புரோடீன் அமைப்பு நிரந்தரமாக மாற்றியமைக்கப்பட்டு அது நீடித்து உழைக்கவும் சிதைவிற்கு உட்படுவதைத் தடுக்கவும் செய்ய முடிகிறது.

தோல் பதனிடுதல் (Tanning of leather) அதன் வகைகள்

தோல் பதனிடும் அல்லது டானிங் செயலில் முக்கியமான படிகள்:

தோல் பதனிடுதல் தொடர்புடைய சில செயலில் முக்கியமான படிகள் பின்வருமாறு:

1. பதனிடுதல் முன்னோடி செயல் (pre-tanning)

2. பதனிடுதல்

3. சாயமிடுதல் மற்றும் நிலைப்படுத்துதல்

4. Finishing

பதனிடுதல் முன்னோடி செயலில் பின்வரும் படிகள் உள்ளன:

(i) தோய்த்தல்

(ii) ஈரமாக்கல்

(iii) சுண்ணாம்பு சேர்த்தலும் பசையாக்கலும் (iv) சுண்ணாம்பு நீக்கம்

(v) Bating

(vi) Pickling

(vii) Depickling

தோல் பதனிடுதலின் வகைகள் :

தோல் பதனிடுதலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை

1. தாவர பதனிடுதல்

2. குரோம் பதனிடுதல் ஆகும்.

1. தாவர பதனிடுதல் (Vegetable tanning)

பதனிடப்படாத தோல்களின் பண்புகள் அவற்றை சில வேர், மூலிகைகள் ஆகியவற்றின் நீரிய சாறுடன் தொடர்பில் இருக்குமாறு செய்தால் முற்றிலும் மாறுகின்றன. இதுவே தாவர பதனிடுதல் எனப்படும்.

தாவர பதனிடுதல் இருவகைகளாக பிரிக்கப்படுகிறது.

1. பைரோகேலால் டானிங்

2. கேடிகால் டானிங்

தாவர பதனிடுதலின் தத்துவங்கள்

தோல்களின் புரோடீனுடன் சேர்ந்து அதனை அழியாத பொருளாக மாற்றும் வினைத்திறனுள்ள தாவர பொருட்களே டானின் (Tannin) எனப்படும். தாவரங்களில் இந்த டானின்கள் பரவலாய் காணப்படுகின்றன. 

டானின் பொருட்கள் யாவும் பட்டைகள், மரக்கட்டை (wood), கனிகள், இலைகள், தளிர்கள், வேர்கள் மற்றும் தோலுறைகள் போன்ற வடிவங்களில் உள்ளன.

வெவ்வேறு மூலங்கள் அல்லது ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட டானின் பொருட்கள் வெவ்வேறு நிறங்கள், டானின் பண்புகள். உருவாகும் லெதரின் அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளன.

 எனவே தோல் பதனிடுபவர்கள் பல்வேறு பதனிடும் பொருட்களைக் கலந்து நீடித்து உழைக்கும் பண்புகளை உடைய லெதரைப் பெறுகின்றனர். 

தாவரங்களின் இலைகள், பட்டைகள் போன்றவற்றிலிருந்து தாவர டானின்கள் மிகப்பெரிய நீரால் பிரித்தெடுக்கப்பட்ட பாலிஃபீனால் மூலக்கூறுகளைப் பெற்றுள்ளன.

 இவற்றில் சில அமிலத்தொகுதிகளும் இருமுனை H -பிணைப்புகளும் உள்ளன. தாவர டானின் பொருட்கள் அதிகமான சுவரும் திறனுடையவை. 

இவை புரோடீன்களுடன் இணைந்து அவற்றிற்கு அமிலம், காரம் மற்றும் பாக்டீரியா எதிர்க்கும் பண்பினைத் தருகின்றன. தாவர டானின்கள் மிகவும் அதிக மூலக்கூறு எடையைப் பெற்றுள்ளன.

தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் தாவர டானின் பொருட்கள் காணப்படுகின்றன.


எண்  தாவர பகுதிகள்   உதாரணங்கள் 
1.  இலைகள்  Dhara இலைகள்
2.  பட்டைகள் ஆவாரம், ஈகாலிப்டஸ்
3.  விதைகள் Myrobalam விதைகள்
4.  Pods Divi Divi ruts


தாவரடானின்-ஐ பாதிக்கும் காரணக்கூறுகள் தாவர டானின் பின்வரும் காரணக்கூறுகளைச் சார்ந்துள்ளது.

(i) அமைப்பின் pH

தாவர டானின் செய்வதற்கு உகந்த pll எல்லை 3.5-5 ஆகும். இது தவிர வேறு pH எல்லைகளில் டானிங் செய்ய இயலாது.

(ii) காலவரை

தாவர டானிங் நிகழ்த்த அதிக நேரம் தேவைப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட லெதரில் சில முக்கியமான செயற்பண்புகட்காக டானிங் செயலை குழிகளில் மெதுவாக நிகழ்த்த வேண்டும்.

(iii) செறிவு 

தாவர டானிங் செயலின் துவக்கத்தில் திரவத்தின் செறிவு குறைவாய் இருக்க வேண்டும். இதனை சிறிது சிறிதாக அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். துவக்கத்தில் தாவர டானிங் திரவத்தின் செறிவு அதிகமாய் இருப்பின், அது பதனிடப் படாத தோல் மீது ஒரு அடுக்கினை உருவாக்குகிறது. இதனால் குருணைகள் சுருங்கும். எனவே செறிவு ஒரு முக்கியமான காரணக்கூறாகும்.

(iv) வெப்பநிலை

வெப்பநிலையைச் சிறிது உயர்த்தினாலும் டானிங் வோழ் அதிகரிக்கும்.

(v) Drumming og Mechanical action

டானிங் நிகழ ஆகும் நேரத்தைக் குறைக்க, இச்செயலை Erumகளில் நிகழ்த்த வேண்டும். இவ்வாறு செய்தால் 20 நாட்களில் முடிவடையும். முடிவடையவேண்டிய செயல் 10 மணியில்

(vi) ஆஸ்டிரஸ்சி (Astringency)

ஆஸ்டிரன்சி என்பது டானிங்-கின் திறன் ஆகும். இது டானின் க்கும் டானின் இவ்லாத பொருளுக்கும் உள்ள விகிதம் ஆகும். ஒரு நல்ல leather அதிக ஆஸ்டிரன்சி பெற்றிருக்க வேண்டும்.

(vii) மூலக்கூறு எடை

தாவர டானிங் பொருட்களின் மூலக்கூறு எடை உகந்ததாய் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை இழைகளில் ஊடுருவிச் சென்று இழைகட்கிடையே அமைய முடியும். மூலக்கூறு எடை அதிகமெளில் ஊடுருவல் கடினமாகும். மூலக்கூறு எடை குறைவெனில் பதிவது (fixing) கடினமாகும்.

தாவர டானிங்கை நிலைப்படுத்துதல் (Fixation of vegetable tanning)

தாவர டானிங் நிலைப்படுத்துதலின் வினைவழியை பல்வேறு கொள்கைகளாய் விளக்கலாம் அவை பின்வருமாறு

1. புறப்பரப்பு படிதல் கொள்கை

2. உப்பு இணைப்பு கொள்கை

3 ஹைட்ரஜன் பிணைப்பு உருவாதல் கொள்கை.

Previous Post Next Post

نموذج الاتصال